சங்கராபுரம்: பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு

சங்கராபுரம் அடுத்த எஸ். வி. பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரபு முன்னிலை வகித்தார். 

இதில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றத் தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு, பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவம், இணையவழி குற்றத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், சைபர் குற்றங்கள் ஆகியவை குறித்து இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி