சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு மணி ஆற்றில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்த நிலையில், சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இறந்தவர் புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.