கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மனுக்களுக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் பொதுமக்களிடமிருந்து அதிகளவிலான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்த விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
"போராட்டக்காரர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்".. CJP எச்சரிக்கை