சங்கராபுரம்: கல்லூரி மாணவி மாயம்

சங்கராபுரம் அடுத்த மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி சந்தியா (19) நேற்று பிப்ரவரி 6 அன்று கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி