மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜி, பி.டி.ஓ., அய்யப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனுவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவுரி ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா வரவேற்றார்.
கூட்டத்தில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை நேரடியாக வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறையுடன் களப்பணி மேற்கொண்டு இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், தேர்ச்சியை அதிகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றியத்திற்குட்பட்ட 115க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.