சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் ஆகி சுஜிதா(11) என்ற மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பாரதி தனது மகள் சுஜிதாவுடன் தாய் ஜோதி வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், பாரதியும் அவரது மகள் சுஜிதாவும் மாயமாகினர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாரதி மற்றும் பேத்தி சுஜிதாவை கண்டுபிடித்து தரக்கோரி ஜோதி சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.