சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நல பணியாளர் பழனி முத்து (58) மொபெட்டில் சென்றபோது, அரசு மாணவர் விடுதி அருகே எதிரே வந்த மினி பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.