மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சுற்றி 45க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களும் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
விவசாயித்திற்கு ஏரி பாசனத்தையே நம்பியுள்ளனர். ஆனால், ஏரிக்கு வரும் கிளை வாய்க்கால்கள் துார்ந்து ஏரிக்கு தண்ணீர் வர இயலாத நிலை, உள்ளது. இதனால், பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிளை வாய்க்கால்களை துார் வார வேண்டும் என விவசாயிகள் பொது பணித்துறை அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
பருவ மழை தீவிரமடைவதற்குள் அனைத்து ஏரிகளுக்கு செல்லும் கிளை கால்வாய்களை துார் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.