சங்கராபுரம்: சூறாவளி காற்றில் மக்காச்சோளம் பயிர்கள் சேதம்

சங்கராபுரம் பகுதியில் நான்கு நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால், பூட்டை புதுப்பாலப்பட்டு, மல்லாபுரம், எல்.என்.பட்டி, புதுப்பட்டு, பொய்குணம், கொசப்பாடி, மூக்கனூர், அரசம்பட்டு கிராமங்களில் சுமார் 400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் பயிர்கள் வேருடன் சாய்ந்து சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் வேளாண் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி