தமிழக அரசின் டாஸ்மாக் துறையில் 1000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஊழலை கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பா. ஜ. , சார்பில் கச்சேரி சாலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பா. ஜ. , தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், டாஸ்மாக் ஊழலை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், மகேந்திரன், துரை, வில்சன் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
உரம் கையிருப்பு ஒரு மாதம்தான்: மத்திய அரசு தகவல்