கூட்டத்தில் மாவட்டத்தில் கனிமவளங்களை பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளின் இலவச பயன்பாட்டிற்கு வண்டல் மண் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அனுமதியின்றி வண்டல் மண் எடுத்து வாகன தணிக்கையின் போது கைப்பற்றப்படும் வாகனங்களின் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். குவாரி பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.
கனிம வளங்களை பாதுகாத்து விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் வண்டல் மண் தொடர்பான அனைத்து பணிகளையும் வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தெரிவித்தார்.