கள்ளக்குறிச்சி: இடி, மின்னலுடன் கனமழை; 25 மின் கம்பங்கள் சாய்ந்தன

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் சூறைக் காற்றால் 25 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெருவங்கூா் கிராமத்தில் தென்னை மரத்தின் மீது மின் கம்பி உரசியதால் மரம் தீப்பற்றி எரிந்தது. தியாகதுருகம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மின்வாரியத்தினா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் சேதங்கள் சீரமைக்கப்பட்டு, மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் கடும் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தொடர்புடைய செய்தி