கள்ளக்குறிச்சி: நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல்

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா,. இவர் நீலமங்கலம் எல்லையில் உள்ள புஞ்சை நிலத்தை அளந்து தரும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதன்படி, நீதிமன்ற ஊழியர் பரித்தா, 35;வை நீதிமன்ற ஆணையாராக நியமித்து போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை அளந்து கொடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் பரித்தா நீலமங்கலத்தில் இடத்தை அளக்க சென்றபோது சிறுவங்கூரைச் சேர்ந்த மனோகரன், 65; இவரது சகோதரர் மணி, 52; மற்றும் வேளாங்கண்ணி, 42; ஆகியோர் சேர்ந்து பரித்தாவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து நீதிமன்ற ஊழியர் பரித்தா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மனோகரன், மணி, வேளாங்கண்ணி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி