கடந்த 21ம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது, தனது குடும்பத்தினர் தஞ்சாவூர் மாவட்டம் பேரணியை சேர்ந்த சரண்யா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து வைத்ததாக கணவர் லோகநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து கேட்ட மனைவி சந்தியாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சந்தியா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் லோகநாதன் (33); மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.