கள்ளக்குறிச்சி: நன்கொடை வழங்கி உதவ கலெக்டர் அழைப்பு

நம்ம ஸ்கூல் -நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் பள்ளி மேம்பாடு மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு நன்கொடை வழங்கி உதவ கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர், 'நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் மூலம் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம். 

இதற்காக தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் https://nammaschool.tnschools.gov.in/#/ இணையதளம் மற்றும் தனி வங்கி கணக்கு துவங்கியுள்ளது. அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் நிதி வழங்கி பங்களிக்கலாம். இணையதளம் வழியாக பெறப்படும் நிதி, பள்ளிகளுக்கு தேவையான செலவினங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். நன்கொடையாளர்கள் அளிக்கும் நிதி உதவிக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. 

மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர உதவிட விரும்புவோர் 'உயர் கல்விக்கு சமூக பங்களிப்பு' என்பதை தேர்ந்தெடுத்து உதவலாம். அம்மாணவர்கள் சார்ந்த விவரங்களுக்கு 9122309830 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி