கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் மகன் சுப்ரமணி, 45; இவர், கடந்த 2ம் தேதி நள்ளிரவு 12: 00 மணியளவில் தனக்கு சொந்தமான பைக்கை நிலத்தின் அருகே நிறுத்தி விட்டு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
காலையில் வந்து பார்த்த போது பைக் காணவில்லை. சுப்ரமணி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை திருடிய மாதவச்சரியைச் சேர்ந்த அழகப்பன் மகன் ராமர், 26; என்பவரை நேற்று கைது செய்தனர்.