இந்நிலையில் நேற்று முன்தினம் கல்வராயன் மலையில் பெய்த கனமழை காரணமாக கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் வர துவங்கியுள்ளது. தற்போது கோமுகி அணையின் பழைய ஷட்டர்கள் புனரமைப்பு பணி மேற்கொண்டு வருவதால் அணையின் வரத்து நீர் முழுதும் கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 22 அடி (577 மில்லியன் கன அடி) நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.