சங்கராபுரம் வீட்டில் துப்பாக்கி தயாரித்தவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கள்ள துப்பாக்கி தயாரித்த ஜேம்ஸ் பீட்டர் (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி