கோமுகி அணையில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகே உள்ள கோமுகி அணையில் இருந்து இன்று விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாத், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த திறப்பு விழா நடைபெற்றது. பொதுமக்கள் மலர் தூவி நீரை வரவேற்றனர். இந்த நீர் திறப்பு விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி