முகாமை ஆலையின் முதன்மை இயக்குனர் கண்ணன் தலைமை தாங்கி வைத்தார். கச்சராபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் யோக விஷ்ணு, வட் டார வளமைய மருத்துவர் சம்பத், மூங்கில்துறைப்பட்டு மருத்துவர் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ முகாமில் இ. சி. ஜி. , ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, காச நோய் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடும்பத்தினர் பயனடைந்தனர். சர்க்கரை ஆலையின் தொழிலாளர் நல அலுவலர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.