மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜி மனைவி முத்தாள் (60). இவர் நேற்று (ஜனவரி 22) சாலையில் நடந்து செல்லும்போது, தவறி கீழே விழுந்தார். அதில் காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். வடப்பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.