மக்காத குப்பைகளை இயந்திரம் மூலம் பொடியாக்கி வந்தனர். இந்த இயந்திரம் அமைத்துள்ளனர்.
ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டிலான இந்த இயந்திரம் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஆறு மாதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்தது. பின்பு இயந்திரம் செயல்பாட்டில் இல்லாமல் வீணாகி வருகிறது. தற்போது குப்பைகளை தரம் பிரிக்காமல் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர்.
இதனால் குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வருகின்றது. தூய்மை பணியாளர்கள் தேங்கியுள்ள குப்பைகளை எரிய வைப்பதால், புகை மூட்டமாகி, பல்வேறு வியாதிகள் பரவுவதற்கு காரணமாகின்றது. பழுதடைந்துள்ள இயந்திரத்தை சீரமைத்து , குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.