சங்கராபுரம்: சிறுவன் பைக் ஓட்டி வாலிபர் பரிதாப பலி

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் (26) என்பவர் சங்கராபுரம் ஆற்று பாலத்தில் பைக்கில் சென்றபோது, எதிரே சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் (17) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் சுமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுவன் கிருபாகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி