சங்கராபுரம்: பீரோவை உடைத்து 15 சவரன் நகை திருட்டு

சங்கராபுரம் ஆற்றுப் பாதை தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜேஷ் (43) தனது குடும்பத்துடன் மார்க்கெட் கமிட்டி எதிரே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பழைய வீட்டில் இருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் 15 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து திருடர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி