கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே அக்.31 அன்று பைக்கில் சென்ற பிரசாந்த் (28) மீது அரசுப் பேருந்து மோதி படுகாயமடைந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.