இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் மாரியம்மாளை கைப்பேசி மூலம் தொடர்புகொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டினுள் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.