பைக்கை மணிவண்ணன் ஓட்டினார். திருக்கோவிலூர் - ஆசனூர் சாலையில், செங்கனாங்கொல்லை அருகே சென்றபோது, திருக்கோவிலூரில் இருந்து கொல்லிமலைக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் சுற்றுலா சென்ற வேன் மோதியது. விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற மணிவண்ணன், ராமச்சந்திரன் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேன் கவிழ்ந்ததில் வேன் டிரைவர், திருக்கோவிலூரை சேர்ந்த ஜம்புலிங்கம் (45); என்.ஜி.ஓ., நகர் சரவணன் மனைவி ராஜேஸ்வரி (45); விஜயலட்சுமி (65) உட்பட 13 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.