ரிஷிவந்தியம்: ஓவிய ஆசிரியரின் புது முயற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் வளர்ப்பின் அவசியத்தை பொது மக்களிடையே வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "தொடப்பத்தாலேயே" மரத்தின் படத்தை வரைந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் பங்கு மிகவும் முக்கியமானது, மரம் வளர்ப்பதன் மூலம், நாம் காடுகளின் அழிவை கட்டுப்படுத்தலாம், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தலாம், வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை குறைக்கலாம் மற்றும் பல நன்மைகள் பெறலாம்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பொது மக்களிடையே மரத்தின் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக. 'வெயிலுக்கு இளைப்பாற மரமில்ல' என்ற வாசகம் எழுதி,
வீட்டை சுத்தம் செய்ய பெருக்க தொடப்பம் தேவை. காற்றை சுத்தம் செய்ய மரம் தேவை. என்பதை குறிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் பூந்தொடப்பத்தை நீர் வண்ணத்தில் தொட்டு மரத்தின் படத்தை "தொடப்பத்தாலேயே" மூன்று நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

இந்த வித்தியாசமான முறையில் படம் வரைந்து மக்களின் கவனத்தை ஈர்த்த ஓவிய ஆசிரியர் செல்வத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி