ரிஷிவந்தியம்: பாசாரில் பால்குட ஊர்வலம்

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் உள்ள ஆதிபராசக்தி அம்மா வழிபாட்டு மன்றத்தில் கடந்த 24ம் தேதி சக்தி மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுமக்கள் பலர் அம்மனை வேண்டி வழிபட்டு மாலை அணிந்து கொண்டனர். தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வரும் நிலையில், பால்குட ஊர்வலம் நடந்தது. அதில், மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊரில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மன் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

தொடர்புடைய செய்தி