கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், அவிரியூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானிய உலர் களத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய்த் துறையினர் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.