ரிஷிவந்தியம்: வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிேஷகம்..

வாணாபுரம் அடுத்த சூளாங்குறிச்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக சிறப்பு பூஜை கடந்த 8ம் தேதி துவங்கியது. 9ம் தேதி புண்யாஹவசனம், அக்னி ஆராதனம், மஹாசாந்தி ஹோமம், ரக்ஷாபந்தனம் நடந்தது. நேற்று காலை கோ பூஜை, அக்னி ஆராதனம் நடந்தது. தொடர்ந்து, கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள் (தி.மு.க.,), அருணகிரி (அ.தி.மு.க.,), தொழிலதிபர் செந்தில்குமார், ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, அரசு வழக்கறிஞர் ரஞ்சித், நிர்வாகிகள் செல்வம், சுரேஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மூலவர் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்புடைய செய்தி