ரிஷிவந்தியம் அடுத்த கீழ்தேனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 144 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி, வகுப்பறை கட்டிடத்தின் மீது ஏறி மாணவர்கள் மினி டாங்கியை சுத்தம் செய்யும் வீடியோ வைரலானது. இந்த சம்பவத்தை அடுத்து, ரிஷாவந்தியம் வட்டார கல்வி அலுவலர் தில்லைக்கரசி விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் பாலமுருகன் தலைமையாசிரியர் ராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.