இந்த அடையாள எண்களை வழங்கும் முகாம் கடந்த பிப்ரவரி 10ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேளாண் துறை அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் நகல், நில ஆவணங்கள் நகல்கள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் மற்றும் கிராமங்களில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு செய்ய வரும் 31ம் தேதி இறுதி நாள் ஆகும். எனவே அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு