கள்ளக்குறிச்சி: டிரான்ஸ்பார்மரை உடைத்து திருட்டு

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலத்தில் விளைநில பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 28ம் தேதி, நள்ளிரவு சுப்ரமணியன் என்பவரது விளைநிலத்திற்கு அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்புகளை மர்ம நபர்கள் துண்டித்து, 155 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச் சென்றுள்ளனர். கள்ளக்குறிச்சி தெற்கு உதவி மின்பொறியாளர் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, காப்பர் கம்பி திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி