பிரேத பரிசோதனை மற்றும் ரத்த மாதிரி ஆய்வக பரிசோதனையில், தங்கராசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது தெரிய வந்தது. அதையடுத்து, கள்ளச்சாராய பலி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ், 48 உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான 4 பேர் அளித்த தகவலின் பேரில், இதே வழக்கில் கடலூர் மத்திய சிறையில் உள்ள கதிரவன், (30); ஜோசப், (40), சின்னதுரை, (36); ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.
மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு டி.எஸ்.பி., தேவராஜ் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஹரிஹரசுதன் 3 பேரையும் 5 நாட்கள் (வரும் 22ம் தேதி வரை) காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.