இதில், கே. ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள உரக்கிடங்கினை தமிழ்நாடு கூட்டுறவு உர விற்பனை இணையத்தின் கூடுதல் பதிவாளர் முத்துகுமாரசாமி நேற்று ஆய்வு செய்து, உரங்களின் இருப்பு, பதிவேடுகள், விற்பனை விபரங்கள் குறித்து பார்வையிட்டார். அதேபோல், சின்னசேலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உரக்கிடங்கு மற்றும் கூட்டுறவு காய்கறி அங்காடியினை பார்வையிட்டார்.
அப்போது, மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, சுரேஷ், கூட்டுறவு சார்பதிவாளர் லட்சுமி, சங்க செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.