கள்ளக்குறிச்சி: ஏடிஎம் கார்டு மாற்றிக் கொடுத்து பணம் அபேஸ்

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சோமசுந்தரம் (70), இவர், கடந்த 22ஆம் தேதி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தனியார் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காகக் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த 45 வயது மதிக்கத்தக்க நபரிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து, ரூ.500 எடுத்துத் தருமாறு உதவி கேட்டார். மர்ம நபர் ஏடிஎம் கார்டினை வாங்கி, பின் நம்பர் கேட்டு பதிவிட்டு ரூ.500 பணம் எடுத்துக் கொடுத்தார். 

அப்போது, மர்ம நபர் வேறு ஒரு ஏடிஎம் கார்டினையும் சோமசுந்தரத்திடம் கொடுத்து அனுப்பினார். மறுநாள் 23ஆம் தேதி, கடலூர் மாவட்டம், பெரியசித்தாமூர் பகுதி ஏடிஎம்மில் சோமசுந்தரம் கார்டை பயன்படுத்தி அவரது வங்கியில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த சோமசுந்தரம், வங்கி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துவிட்டு, போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, பணத்தை 'அபேஸ்' செய்த மர்மநபரைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி