கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் திடீரென சரிந்து சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மழைக்காலம் என்பதால் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.