கள்ளக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட ரேஷன் கடைகளில் வழங்கிடும் வகையில், முதற்கட்டமாக 7ஆயிரம் வேட்டிகள், 7 ஆயிரம் புடவைகள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகளை கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலிருந்து தாசில்தார் பிரபாகரன் நேற்று துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து வரவுள்ள வேட்டி சேலைகள் பொங்கல் விழாவிற்கு முன்பாக பயனாளிகளுக்கு வழங்கிடும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.