சின்னசேலம்: அரசு பஸ் மோதி முதியவர் பலி

சின்னசேலம் அடுத்த செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து(78). நீரிழிவு நோயால் பாதித்த இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வலது கணுக்கால் அகற்றப்பட்டது. நேற்று முன்தினம்(அக்.3) இரவு செல்லமுத்து வி. கூட்ரோடு - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரம் 2 கைகளை ஊன்றியபடி சென்றார். டோல்கேட் அருகே சேலத்திலிருந்து சிதம்பரம் சென்ற அரசு பஸ் செல்லமுத்து மீது மோதியது. படுகாயமடைந்த அவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று(அக்.4) காலை இறந்தார். இதுகுறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி