வரஞ்சரம் அடுத்த அசகளத்தூரைச் சேர்ந்த சரவணன் (45) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சரவணன் அணிந்திருந்த கைச்செயின் மற்றும் வெங்கடேசன் அணிந்திருந்த தங்க நகை மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் போலீசில் புகார் அளித்தனர். மொத்தம் 11 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.