கள்ளக்குறிச்சி: 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வாலிபர் சாவு

ஏற்காட்டில் கீரைக்காடு அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சென்னையைச் சேர்ந்த நவீன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஈஸ்வர், பெரம்பலூரைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய மூவர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காக்கம்பாடி அருகே கொண்டை ஊசி வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரசாந்த் உயிரிழந்தார். காயமடைந்த நவீன், ஈஸ்வர் ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்காடு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி