கள்ளக்குறிச்சி பகுதியில் வசிக்கும் நித்யா (35), அபிமன்யு (26) ஆகியோர் ஒரு மாதமாகத் தனியாக வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். அபிமன்யுவின் பல பெண்களுடனான தொடர்பு குறித்து அறிந்த நித்யாவுக்கும் அபிமன்யுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யு, நித்யாவின் தலையில் வெட்ட முயன்றதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நித்யா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில், தியாகதுருவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.