கள்ளக்குறிச்சி: மது அருந்தியதைத் தட்டிக்கேட்டவருக்கு அடி; ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தில், குப்புசாமி (56) என்பவரின் வீட்டின் முன் மது அருந்திய செல்லமுத்துவை (36) தட்டிக்கேட்டதால், அவதூறாகப் பேசி கல்லால் தாக்கியதில் குப்புசாமி காயமடைந்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸார் வழக்குப் பதிந்து செல்லமுத்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி