கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், செக்யூரிட்டி ஊழியருக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, பாதிக்கப்பட்ட பெண் கை குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். வெளி நபர்களை வரவழைத்து கணவரை தாக்கியதாகக் கூறப்படும் பெண் செக்யூரிட்டி ஊழியர் மற்றும் பிறரை கைது செய்யக் கோரி இந்த மறியல் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டது.