உளுந்தூர்பேட்டை: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

உளுந்தூர்பேட்டை பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ராம்குமார் (33) குடும்பத்தினர் கடந்த 18ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். மறுநாள் வீடு திறந்த நிலையில் இருப்பதை அறிந்த ராம்குமார், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பீரோவில் இருந்த 12 சவரன் தங்க நகை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் திருடு போனதை கண்டறிந்தனர். இது குறித்து ராம்குமார் அளித்த புகாரின் பேரில், உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி