கள்ளக்குறிச்சி: டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டவர் தற்கொலை தூண்டிய இருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே டிரேடிங்கில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த இளைஞர் சையது முனீர் (29) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணத்தை இழந்தவர்கள் அவரை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வந்து பணம் தரும் வரை வீட்டில் இருக்கச் சொன்ன நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி அவர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், தற்கொலைக்கு தூண்டியதாக சபீர் (35) மற்றும் அபுபக்கர் (34) ஆகிய இருவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி