கள்ளக்குறிச்சி மாவட்டம் முரார்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், மதுரை காளீஸ்வரியை 2019-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். சில ஆண்டுகள் கழித்து, காளீஸ்வரிக்கு ஏற்கனவே நான்கு திருமணங்கள் நடந்ததும், சிவக்குமார் ஐந்தாவது கணவர் என்பதும் தெரியவந்தது. தற்போது அவர் ஆறாவதாக மணிகண்டனை திருமணம் செய்துகொண்டு, வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாயுடன் சென்றதாக சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.