தியாகதுருகம்: இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு

அரசு வழங்கிய வீட்டு மனைகளுக்கு இணைய வழி பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;கடந்த 2011ம் ஆண்டு பிரிதிவிமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 137 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் தலா 2 சென்ட் பரப்பளவில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த மனைகளை அளவீடு செய்யக்கோரி கலெக்டர், ஆர். டி. ஓ. , ஆகியோரிடம் மனு கொடுத்தோம். இதை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுப்படி 2024ம் ஆண்டு வருவாய்த்துறையினர் இடத்தை அளவீடு செய்து, ஒப்படைவு வழங்கினர். ஆனால், இதுவரை இணைய வழி பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, வீட்டு மனைக்கு இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி