கள்ளக்குறிச்சி: கீழே கிடந்த தங்கச் செயின் உரியவரிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மோரப்பாதை அருகே ஜனவரி 25ஆம் தேதி கீழே கிடந்த 9 கிராம் தங்கச் செயினை சக்திவேல், ராஜேந்திரன், வெங்கடேசன் மூவரும் மீட்டு இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசைனிடம் ஒப்படைத்தனர். இந்தச் செயின் முத்து தெருவைச் சேர்ந்த ஜோஸ்வாகரோலின் எலிசபெத் ராணி தம்பதியருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. பிப்ரவரி 5ஆம் தேதி செயின் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செயினை மீட்டு போலீசாரிடம் வழங்கிய மூவரையும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி